பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் நாள்:-22-04-2024 கிழமை:- திங்கட்கிழமை
*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்* *நாள்:-22-04-2024* *கிழமை:- திங்கட்கிழமை* *திருக்குறள்* பால் : பொருட்பால் இயல்: அரணியல் அதிகாரம்: நாடு *குறள் எண் : 734* *குறள்:* உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. பொருள்: மிகுந்த பசியும், நீங்காத நோயும், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும். *பழமொழி :* Sweet are the uses of adversity வறுமை வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறது *இரண்டொழுக்க பண்புகள் :* 1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன். 2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன். *பொன்மொழி :* பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.___ நபிகள் நாயகம் *பொது அறிவு :* 1. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது! விடை: பெட்ரோலியம் 2. “தமிழ் மொழி” என்பது? விடை: இரு பெயரொட்டுப் பண்புத்தொகை *English words & meanings :* minuscule - extremely small, மிகமிகச் சிறிதான, microcosm-a small model of some thing large, நுண்ணி...