பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் நாள்: 29-06-2024 கிழமை: சனிக்கிழமை
*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்* *நாள்: 29-06-2024* *கிழமை: சனிக்கிழமை* *திருக்குறள்:* பால்:பொருட்பால் அதிகாரம்:கல்லாமை *குறள் எண்:406* உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களர்அனையர் கல்லா தவர். பொருள்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர். *பழமொழி :* Pride comes before fall. அகம்பாவம் அழிவைத் தரும். *இரண்டொழுக்க பண்புகள் :* *மழைநீரே குடிநீருக்கு ஆதாரம் என்பதால் மழை நீரை சேமிப்பேன். *தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவேன். *பொன்மொழி :* " என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள்; ஆனால் என் நேரத்தை மட்டும் கேட்காதே! ---- நெப்போலியன் ஹில் *பொது அறிவு :* 1. உலகின் மிகப்பெரிய தீவு எது? விடை: கிரீன்லாந்து 2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது? விடை: ஆஸ்திரேலியா *English words & meanings :* honesty-நேர்மையான, sincerity-நேர்மை *வேளாண்மையும் வாழ்வும் :* உற்பத்தி பெருக்கத்திற்காக உலக நாடுகள் செயற்கை வேளாண்மை செயல் படுத்த ஆரம்பித்தன. ஆனால் அது மண்ணையும் மக்களையும் மக்கள் உடல்நிலையும் பாதிக்க ஆரம்பித்தது. *நீதிக்கதை* வேலை சிற...